கர்நாடகாவின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு பொம்மையிடம் பிரதமர் மோடி உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தார். மேலும், பிரதமர் மோடியை சந்தித்தும் பேசினார்.  கர்நாடகாவின் புதிய முதல்வராக கடந்த புதன்கிழமை பதவியேற்ற பசவராஜ் பொம்மை,  பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை நேற்று டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   ஒன்றிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து, ‘காவிரி நதியின்  குறுக்ேக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்,’  என்று கேட்டு கொண்டார்.

பின்னர், பிரதமர் மோடியை  சந்தித்து பேசிய பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்தினார். அதை கேட்ட மோடி, கர்நாடகாவின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒன்றிய  அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதி அளித்துள்ளார். பொம்மை இன்று காலை பெங்களூரு திரும்புகிறார்.

Related Stories: