×

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...!

சென்னை: தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஓய்வு எடுக்காத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில், காவலர்களின் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒரு நாள் விடுப்பு தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்.பி தவறாமல் செயல்படுத்த வேண்டும் என  சுற்றறிக்கை வாயிலாக டிஜிபி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,DGP ,Silendrababu , Police in Tamil Nadu must be given one day off a week: DGP Silenthrababu orders ...!
× RELATED தமிழகம் முழுவதும் பொறியியல்...