240 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 8 பேர் கைது..! உசிலம்பட்டியில் பரபரப்பு

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு கடத்தி வந்த 240 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வத்தலக்குண்டு வழியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு கஞ்சா கடத்தி வருவதாக எஸ்பி தனிப்படை போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் உசிலம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் மற்றும் டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், கார் மற்றும் டூவீலரில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

வாகனங்களில் வந்தவர்களை பிடித்து விசாரித்த போது, உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைப்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ்(35), இளங்கோவன்(32), வடகாட்டுப்பட்டியை சேர்ந்த குமார்(41), அன்னமார் பட்டியைச் சேர்ந்த சவுந்திரபாண்டி(38), வலையப்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(36), போலக்கப்பட்டியைச் சேர்ந்த நரேஷ்(24), தேனி மாவட்டம் கொங்குவார்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(41), இவரது மணைவி மோனகா(27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 240 கிலோ கஞ்சா, ரொக்கப்பணம் ரூ.48,200 மற்றும் கார், 2டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய பாலமுருகன்(25), சுரேஷ்(44) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்த கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்பி பாராட்டினார்.

Related Stories: