தமிழ்நாட்டின் 1076 கி.மீ. கடலோர பகுதி பாதுகாப்பில் மீனவர்கள் உதவுகின்றனர்!: டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் 1076 கி.மீ. கடலோர பகுதி பாதுகாப்பில் மீனவர்கள் உதவுகின்றனர் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலையும், கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்திய ஆன்லைன் கருத்தரங்கில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசினார். அப்போது இந்தியாவிலேயே கடலோர பாதுகாப்புக்கு தனி பிரிவு அமைத்த மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 13 மாநிலங்களின் கடலோர பாதுகாப்பு காவல் அதிகாரிகள்,  ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Related Stories:

>