புரட்சிகர இயக்கங்களை வழிநடத்திய வங்காளம் இந்தியாவுக்காக போராடுகிறது: மம்தாவை சந்தித்த பாடலாசிரியர் கருத்து

புதுடெல்லி: புரட்சிகர இயக்கங்களை வழிநடத்திய வங்காளம், இன்று இந்தியாவுக்காக போராடுகிறது என்று டெல்லியில் மம்தாவை சந்தித்த பாடலாசிரியர் கூறினார். மேற்குவங்க முதல்வர் பானர்ஜி, ஐந்து நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரை மம்தா சந்தித்தார். இந்நிலையில், நேற்றிரவு இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் நடிகை ஷபானா ஆஸ்மி  ஆகியோர் மம்தாவை சந்தித்தனர். அதன்பின், ஜாவேத் அக்தர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘புரட்சிகர இயக்கங்களை வழிநடத்தியதில், வரலாற்று ரீதியாக வங்காளம் எப்போதுமே ஒரு படி மேலே உள்ளது.

அதனால் தான் பல்துறை கலைஞர்களும் அறிவுஜீவிகளும் மம்தா பானர்ஜியை ஆதரித்தனர். மாற்றம் தேவையா? என்கின்றனர். எல்லோருக்கும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில், ‘மாற்றம்’ இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது நாட்டில் பதற்றம், வன்முறை, ஆக்கிரமிப்பு, கலவரம் போன்ற விசயங்கள் அதிகரித்துவிட்டன. முதலில் மேற்குவங்கம் வங்காளத்துக்காக போராடியது; இப்போது இந்தியாவுக்காக போராட விரும்புகிறது’ என்றார்.

Related Stories:

>