×

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்..! கேரளாவில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு வேண்டுகோள்: ராகுல் காந்தி ட்விட்

டெல்லி: கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், கேரளாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான   ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதலையும் கேரள மக்கள் பின்பற்றுமாறு கேரளாவில் உள்ள  சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Corona ,Kerala ,Rahul Gandhi , Follow the Corona guidelines ..! Appeal to brothers and sisters in Kerala: Rahul Gandhi tweet
× RELATED உரிமைகள், சுயமரியாதைக்காக போராடி...