தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொற்று எந்த பகுதியில் இருந்து பரவி அதிகரித்து வருகிறது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார். கேரளத்தில் வீட்டில் சிகிச்சை பெறுவதால்தான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு அதில் வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

Related Stories:

>