தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் 12,109 பேரும் 2ம் அலையின் போது 21,857 பேர் மரணம் : ஒன்றிய அரசு தகவல்!!

டெல்லி : இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் தான் உயிரிழப்புகள் அதிகம் என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பவார் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை மாநிலங்கள் வாரியாக தருமாறு மக்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பவார் எழுத்துபூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

அந்த பதிலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்

* இந்தியாவில் இதுவரை 4,22,022 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். முதல் அலையின் போது நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,48,738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் 2வது அலையின் போது 2,73,284 பேர் பலியாகி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் முதல் அலையை காட்டிலும் 2வது அலையில் உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

* தமிழகத்தில் முதல் அலையின் போது, 12,109 பேரும் 2ம் அலையின் போது, 21, 857 பேர் மரணம் அடைத்துள்ளனர்.  

*  2 அலைகளின் போதும் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் அலையின் போது 49,463 பேரும் 2ம் அலையின் போது 82,936 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

* நாட்டிலேயே மிசோரமில் தான் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அங்கு முதல் அலையின் போது 8 பேர் மரணம் அடைந்திருந்த நிலையில், 2வது அலையில் 132 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

Related Stories: