3000 மீட்டர் ஸ்டீப்புள்சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் சேபிள்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார். தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். எனினும் தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் அவினாஷ் சேபிள் 7வது இடத்தை பிடித்தார். ஹீட்ஸ் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

அடுத்ததாக அதிவேகமாக ஓடிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் அவினாஷ் சேபிளின் நேரம் 4வது இடத்திற்கு மேல் வந்தவர்களில் முதல் 6 இடங்களுக்கு அதிகமாக இருந்ததால் அவரால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.  இருப்பினும் அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.  தன்னுடைய தேசிய சாதனையை உடைத்த பெருமையுடன் அவினாஷ் சேபிள் இந்தப் பிரிவு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.  அவினாஷ் வெளியேறினாலும் அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள யூஜினில் நடைபெறும் 2022 உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார்.

Related Stories: