பசவராஜ் பொம்மை அரசின் நிர்வாகத்தில் தலையிட மாட்டேன்: எடியூரப்பா

பெங்களூரு: பசவராஜ் பொம்மை அரசின் நிர்வாகத்தில் தனது தலையீடு எந்த விதத்திலும் இருக்காது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை அண்மையில் கர்நாடக முதல்வர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். எனினும் எடியூரப்பாவின் நிழல் ஆட்சியாக தான் பசவராஜ் பொம்மையின் ஆட்சி நடைபெறும் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா அமையவிருக்கும் அமைச்சரவையில் தனது தலையீடு இருக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனிடையே பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் இடம்பெற தமது மனசாட்சி இடமளிக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் இணைய தனக்கு விருப்பமில்லை என்றார். இதன்மூலம் கர்நாடக மாநில பாஜகவில் உட்கட்சி குழப்பம் நீடிப்பது அம்பலமாகியுள்ளது.

Related Stories:

>