கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் 2 சிறுமிகள் நள்ளிரவில் பீச்சில் தங்கியது ஏன்?....கோவா பாஜ முதல்வர் பேச்சால் சர்ச்சை

பானஜி: கோவாவில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. கோவா பெனாலியம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண் நண்பர்களுடன் 2 சிறுமிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த அரசு ஊழியர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பர்களை தாக்கி 2 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பி உள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், ‘‘14 வயது சிறுவர்கள் இரவு முழுவதும் கடற்கரையில் தங்கியிருக்கும்போது, ​​பெற்றோர்கள் தான் அதை கவனிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க முடியாது. ஒரு விருந்துக்காக கடற்கரைக்குச் சென்ற 10 இளைஞர்களில் நான்கு பேர் (2 ஆண்கள், 2 சிறுமிகள்)  இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி உள்ளனர். மீதமுள்ள ஆறு பேர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ,’’ என்றார். சாவந்தின் இந்த பதில், பெரும் சர்ச்சையை ஏற்படு்த்தி இருக்கிறது. அவருக்கு எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: