ஜாம்பியா வீரரை வீழ்த்தி குத்துச்சண்டையில் சதீஷ் சாகசம்: மேரி கோம் தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில்  91கிலோ ஹெவி வெயிட் பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறினார். குத்துச் சண்டையில் பதக்கம் வாய்ப்பு உள்ளவர்களாக  கருதப்பட்ட  இந்திய வீரர்கள் விகாஷ் கிருஷ்ணன், மணீஷ் கவுசிக், ஆஷிஷ் குமார் ஆகியோர் தொடர்ந்து தோல்வி அடைந்து வெளியேறினர். அதே நேரத்தில் இந்திய வீராங்கனைகள் மேரி கோம், லவ்லினா, பூஜா ராணி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை அளித்தனர். இந்நிலையில் நேற்று  நடைபெற்ற  91கிலோ ஹெவி வெயிட் எடை பிரிவு முதல் சுற்றில்  இந்திய வீரர் சதீஷ் குமார் களமிறங்கினார்.

அவரை  ஜமைக்கா வீரர்  ரிகர்டோ பிரவுனை எதிர்கொண்டார். சதீஷ்  3 சுற்றுகளிலும் அசத்தாலாக விளையாடி புள்ளிகளை குவித்தார். ஆஸ்திரேலியா, பல்கேரியா, பெரு, உகாண்டா, ரஷ்யா என 5  நடுவர்களில், ரஷ்ய நடுவர் மட்டும் 2, 3 சுற்றுகளில் மட்டும் ஜமைக்கா வீரருக்கு கூடுதல் புள்ளிகளை வழங்கினார். எஞ்சிய 4 நடுவர்களும் 3 சுற்றுகளிலும்  இந்திய வீரருக்கே அதிக புள்ளிகளை தந்தனர். அதனால் முன்னிலைப் பெற்ற சதீஷ் 4-1 என்ற புள்ளி கணக்கில்  ரிகர்டோ பிரவுனை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் சதீஷ்  நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் ஜாலோலோவை எதிர்கொள்கிறார். 51 கிலோ எடை பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை மேரிகோம் நேற்று கொலம்பியா வீராங்கனை   இன்கிரிட் லோரெனாவை எதிர்கொண்டார். கடுமையாக போராடிய மேரி கோம்,  3 சுற்றுகளில் 2ல் அதிக புள்ளிகள் பெற்றார். ஆனாலும் 5 நடுவர்களின் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 2-3 என்ற புள்ளி கணக்கில் மேரி கோம் தோற்று வெளியேறினார்.

Related Stories:

>