ஒலிம்பிக்....

அமெரிக்க வீரருக்கு கொரோனா:  ஆஸி வீரர்களுக்கு குவாரன்டைன்

அமெரிக்காவைச் சேர்ந்த கொம்பு ஊன்றி தாண்டுதல் விளையாட்டு வீரர் சாம் கென்ட்ரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்ததால்  ஆஸியை சேர்ந்த 66 பேர் கொண்ட மொத்த தடகள குழுவினருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை செயயப்பட்டது. கூடவே அவர்களை குவாரன்டைனில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

காலிறுதியில் சிந்து

இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ள பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று 3வது சுற்றில்  டென்மார்க்  வீராங்கனை  மியா பிளிச்பெல்ட்டை 21-15, 21-13 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகனே யாமகுச்சியை எதிர்கொள்கிறார். இவரைதான் மார்ச் மாதம் நடந்த ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடர் காலிறுதியில் வீழ்த்தி சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories:

>