தமிழர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை: ஒன்றிய அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை: மலேசியாவில் வாழும் தமிழர்களை கொரோனா சூழலில் தமிழகம் வர குறைந்த கட்டணத்தில் விமான சேவை துவங்க வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,‘மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரோனா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களை பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் சரவணனுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>