ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் ரூ.97 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், எம்எல்ஏ சந்திரனிடம் சாலை, கழிவுநீர், கட்டிடம் உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தனர். அதனை, கலெக்டரின் பார்வைக்கு எம்எல்ஏ எடுத்து சென்றார். பின்னர், மாவட்ட  ஊராட்சி முகமை திட்ட நிதியில் இருந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  தொடர்ந்து செங்கட்டானுர், மகன்காளிகாபுரம், அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், பெய்யராமாபுரம், வங்கனூர், கோபாலபுரம், நாகபூண்டி ஆகிய பகுதிகளில் புதிய வளர்ச்சி பணிகளுக்கு எம்எல்ஏ சந்திரன் அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார்.

மகன்காளிகாபுரம்  ஊராட்சி பங்காருபாளையம் கிராம மக்களின் 10 ஆண்டுகால எதிர்பார்பாக இருந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஏரி கால்வாய்க்கு ரூ.9.70 லட்சத்தில் தடுப்பு சுவர்  அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அம்மையார்குப்பத்தில் ரூ.8.80 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள் தொடங்கின. நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலையரசி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, சிலம்பு பன்னீர்செல்வம், சீராளன், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர்கள் திலகவதி ரமேஷ், சிவக்குமார், பிரமிளா வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: