போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (24). அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம், சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு சென்ற ஜோதி, அவளிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்தார். இதில், சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ், தலைமறைவாக இருந்த ஜோதியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>