திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.79.19 லட்சம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், அதற்கான காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 30 நாட்களில் பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கை, கடந்த 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில் கோயில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில், கோயில் ஊழியர்கள் உண்டியலை  திறந்து சமூக இடைவெளியுடன் எண்ணினர். இதில், ரூ.79,19,155 ரொக்கம், 675 கிராம் தங்கம், 6,245 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

Related Stories: