தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 67 மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார் நிறுவனங்களுக்கான, பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், கலெக்டர் ஆல்பிஜான் 67 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது : திருவள்ளுர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக 2,67,208 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 5,163 பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே,  சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமில் 16 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர். அதில் 8, 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் 16 நிறுவனங்கள், 315 மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்தனர். அதில், 67 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தி, பல்வேறு வேலைவய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குர் கு.சசீதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: