ஆட்டோ டிரைவர் கொலை கோவை கோர்ட்டில் 2 பேர் சரண்

சென்னை: காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). ஆட்டோ டிரைவர். கடந்த 25ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், அவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதை பார்த்ததும், செந்தில்குமாரின் தம்பி ரகுவரன் அங்கிருந்து தப்பிவிட்டார். அப்போது வீட்டில் புகுந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.  இதுதொடர்டபாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2012ம் ஆண்டில் நாராயணமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழி வாங்க இந்த வெடிகுண்டு தாக்குதல், கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

ரகுவரனை கொலை செய்ய வந்த மர்மநபர்கள், அவர் தப்பிவிட்டதால், ஆத்திரம் அடங்காமல் செந்தில்குமாரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில்  செந்தில்குமாரின் குடும்பத்தினர் 4 பெண்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து போலீசார், தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக, பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (30), சதீஷ்குமார் (25) ஆகியோர் கோவை ஜேஎம் எண் 5 கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: