அலாஸ்காவில் பயங்கர பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

வாஷிங்டன்: அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ள பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் 91 கிலோ மீட்டர் தொலைவில், 29 கிலோ மீட்டரில் கடலுக்கு அடியில் நேற்று  சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது, 8.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சக்தி வாய்ந்த பூகம்பம் காரணமாக அலாஸ்கா தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை 6.5 மற்றும் 5.6 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. பூகம்பம் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

Related Stories:

>