ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை ஏமாத்துறாங்க... உஷார் மக்களே!

துபாய்: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவை கடந்த ஏப்ரல் 24 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், விடுமுறையில் இந்தியா திரும்பியவர்கள், குடும்பத்தினரை காண சென்றவர்கள், தொழில் நிமித்தமாக சென்றவர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீண்டும் அமீரகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், கோல்டன் விசா பெற்றவர்கள், தூதரக அதிகாரிகள், அமீரகத்தை சேர்ந்தவர்கள், எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள், முதலீட்டு விசா வைத்திருப்பவர்கள், தூது குழுவினர் அமீரகம் வருவதற்கு தடை இல்லை.

இந்த சூழலை பயன்படுத்தி  சிலர், இந்தியாவில் உள்ள அமீரக தூதரகம் பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கி, அமீரகம் வருவதற்கு அனுமதி பெற்று தருவதாக கூறி குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என ஏமாற்றுகின்றனர். இதுபோல், எந்த விதமான அனுமதியும் வழங்கப்படுவதில்லை தற்போது, அந்த போலி இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்கள் இது போன்று செயல்படுவர்கள் மீது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஐக்கிய அரபு அமீரக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: