6 போலீசாரை சுட்டுக் கொன்றவர்களை துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: அசாம் அரசு அறிவிப்பு

கவுகாத்தி: அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே 3 மாவட்டங்களில் எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த 26ம் தேதி எல்லையில் பாதுகாப்புக்கு சென்ற அசாம் போலீசார் மீது மிசோரம் போலீசாரும், சமூக விரோதிகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். போலீசார் உட்பட 50 பேர் காயமடைந்து உள்ளனர். எஸ்பி ஒருவர் படுகாயம் அடைந்து மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அசாம் அரசு கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் நடவடிக்கையில் அசாம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சேகரித்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர். அதேபோல், துப்பாக்கிச்சூடு நடத்திய மிசோரம் போலீசார், சமூக விரோதிகளை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அசாரம் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: