டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

சென்னை: டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்த டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளை இறக்கிவிட்ட பிறகு பணிமனைக்கு புறப்பட்டது. இரவு 9.45 மணியளவில் ரயில் பணிமனையின் உள்ளே சென்றபோது, திடீரென எஸ்-6 பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இதனால், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி ரயில் சக்கரத்தை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினர். பின்னர் வழக்கம் போல் பராமரிப்புக்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories:

>