மருத்துவமனையில் தாலி செயின் திருடிய பெண் பிடிபட்டார்

சென்னை: திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் தாலி செயின், வெள்ளி கொலுசு திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். நன்மங்கலம் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மனைவி பிரசவத்திற்காக கடந்த 28ம் தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், பிரசவ அறைக்கு செல்லும் முன்பு 41 கிராம் தாலி செயின் மற்றும் 250 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு ஆகியவற்றை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அந்த நகைகள் மாயமாகி இருந்தது.  இது குறித்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ராமு புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பெரம்பூர் வீனஸ் ரோடு பகுதியை ேசர்ந்த பிரீத்தி (27), நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories:

>