பிஇ படிப்புக்கு 69 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்காக இதுவரை 69 ஆயிரம் மாணவ- மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், இந்த கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் கடந்த 26ம் தேதி துவங்கியது. அன்று முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 24ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே சுமார் 40 ஆயிரம் பேர், தங்களின் விண்ணப்பித்து இருந்தனர்.இதையடுத்து, நேற்று மாலை வரை 69 ஆயிரத்து 618 மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 973 பேர் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 31 ஆயிரத்து 276 பேர் தங்களின் சான்றுகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Related Stories:

>