மேகதாது அணை விவகாரம் கர்நாடகாவை கண்டித்து ஆக.5ல் உண்ணாவிரதம்: பாஜ தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: மீன்வளக் கொள்கை குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் 30ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழக பாஜ மீனவர் அணியின் சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக உரிமைக்கு எதிராக மேகதாது அணை கட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் வருகிற 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் எனது தலைமையில் தஞ்சை பனகல் பில்டிங் அருகில் நடைபெறும் என்றார்.

Related Stories:

>