செட்டிநாடு காளான் மசாலா

 எப்படிச் செய்வது?

Advertising
Advertising

கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி கொண்டு மூடி 10 நிமிடங்கள் வேக விடவும். செட்டிநாடு காளான் மசாலா தயார்!