உலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது!!

டெல்லி, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2009ம் ஆண்டு முதல் சமூக ஊடகமான டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார். அவ்வப்போது, தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள், வாழ்த்துக்கள் போன்றவற்றை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருவார். கடந்த 2010ம் ஆண்டில், ஒரு லட்சம் பேர் அவரை பின்தொடர்ந்தனர். இந்நிலையில், இன்றைய நிலையில் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 70 மில்லியனை (7 கோடி பேர்) தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே 2020 ஜூலையில் மோடியை 60 மில்லியன் பேர் பின்தொடர்ந்த நிலையில், கடந்த ஓராண்டில் மேலும் 10 மில்லியன் பேர் கூடுதலாக பின்தொடர்ந்துள்ளனர்.போப் பிரான்சிசை 53 மில்லியன் பேரும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை 30.9 மில்லியன் பேரும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை 129.8 மில்லியன் பேரும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை  7.1 மில்லியன் பேரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 26.3 மில்லியன் பேரும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை 19.4 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது அவரை 88.7 மில்லியன் பேர் பின் தொடர்ந்தனர். ஆனால், அவரது சர்ச்சை கருத்து விவகாரத்தால் அவரது கணக்கை டுவிட்டர் முடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: