கேரளாவில் 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பணியாற்றிய போலி வழங்கறிஞர்!: முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பணியாற்றிய போலி வழங்கறிஞர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஜெசி சேவியர் என்பவர் சட்டம் படிக்காமல் போலியாக பார் கவுன்சிலில் கடந்த 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார். மேலும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, அவர் சட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று பார் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அவர் வேறு ஒரு வழக்கறிஞரின் பதிவு எண் மூலம் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் ஜெசி சேவியர் தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஜெசி சேவியர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் குடும்ப சூழல் காரணமாக பட்டம் முடிக்க முடியவில்லை என்றும் வழக்கறிஞர் கவுன் அணியாமல் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குற்றம்புரியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெசி சேவியர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

>