அதிமுக ஆட்சியில் தூர்வாராமல் கிடந்த 2000 ஏக்கர் பயன்பெறும் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது

*விவசாயிகள் மகிழ்ச்சி

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், திருவிளையாட்டம் அருகே அதிமுக ஆட்சியில் தூர்வாராமல் கிடந்த 200 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும் வாய்க்கால் எம்எல்ஏ முயற்சியால் தூர்வாரப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், திருவிளையாட்டம் அருகே 2000 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும் வாய்க்கால் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தூர்வாராமல் கிடந்தது. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முயற்சியால் நேற்று அந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

வீரசோழன் ஆற்றில் இருந்து ஆண்டான்சேரி தலைப்பு வாய்க்கால் ஈச்சங்குடி, விருவிளையாட்டம் கிராமங்களுக்கு செல்கிறது. 5 கி.மீ தூரம் உள்ள இந்த வாய்க்கால் 2000 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் விவசாயிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

எம்எல்ஏ நிவேதாமுருகன் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை மூலம் இந்த வாய்க்காலை அகலப்படுத்தி தூர்வார ஏற்பாடு செய்தார். அதன் பேரில் அந்த வாய்க்கால் ஜேசிபி மூலம் தூர்வாரப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று வாய்க்காலை தூர்வாரி கொடுத்த எம்எல்ஏவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் திமுக ஆட்சிக்கும், பொதுப்பணித்துறைக்கும் விவசாயிகள் நன்றி பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: