கிலோ ₹80க்கு விற்பனை : பூத்து குலுங்கும் சாமந்தி பூ

தர்மபுரி :தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, தொப்பூர், ஜருகு, காணிகரஅள்ளி, பாளையம்புதூர், சாமிசெட்டிப்பட்டி, கெங்கலாபுரம், தொப்பையாறு டேம் பகுதி, பஞ்சப்பள்ளி, பன்னிஅள்ளி, பாளையம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில், 800 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி, ஆயுதப்பூஜையை எதிர்நோக்கி சாமந்தியை அதிகம் சாகுபடி செய்துள்ளனர்.

 தற்போது தென்மேற்கு பருவமழை பெய்துவருவதால், பூக்கள் பூத்து குலுங்கி கண்களை கவரும் வகையில் காணப்படுகிறது. ஆடிப்பண்டிகையொட்டி சாமந்தி பூவியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பூ மார்க்கெட் சரியாக இயங்காமல், பூ விலை போகாமல் விவசாயிகள் கீழே கொட்டும் நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து பூ மார்க்கெட்டும் இயங்குகிறது.

இதனால் ஆடிப்பண்டிகையொட்டி தினசரி பெங்களூரு, திருச்சிக்கு சாமந்தி பூக்கள் அதிகம் செல்கிறது. இதனால் சந்தையில் சாமந்திக்கு நிலையான விலை கிடைக்கிறது. நேற்று ஒருகிலோ சாமந்தி பூ ₹80க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: