திருப்பூரில் மெத்தை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து!: ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

திருப்பூர்: திருப்பூரில் மெத்தை தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்திருக்கின்றன. திருப்பூர் இந்திரா நகரில் உள்ள புளியமரம் தோட்டம் பகுதியில் கேரளாவை சேர்ந்த கபீர் குட்டி என்பவர் கடந்த 15 வருடங்களாக பஞ்சு மெத்தை குடோன் நடத்தி வருகிறார். அவர் பஞ்சுகளை விலைக்கு வாங்கி வந்து மெத்தையாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து குடோனை போட்டுவிட்டு சென்ற பணியாளர்கள் இன்று காலை வந்தபோது குடோனில் இருந்து கரும்புகையுடன் நெருப்பு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்து தீயை அணைத்தனர். பஞ்சு குடோன் என்பதாலும் ஆடி காற்று வேகமாக அடித்ததாலும் தீயை அணைக்கும் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>