கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று முழு பொதுமுடக்கம் அமல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. கேரளாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டிலேயே கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வருவது மூன்றாம் அலைக்கான முன்னோட்டம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேரள அரசு இந்த வார இறுதிநாட்களான ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 தினங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமே அமலில் உள்ளது. கேரளாவில் மூன்றாவது முறையாக மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 6 பேர் கொண்ட குழுவை கேரளாவிற்கு அனுப்புகிறது. கேரளாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 2வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்னையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மூன்றாவது அலையில் தேவைகள், உருமாறிய கொரோனா தொற்று பரவுகிறதா உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது. கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 22,000க்கும் மேல் உள்ளது.

Related Stories: