கொரோனா கட்டுப்பாடு விதியை பின்பற்றாத திருச்செந்தூர் கோயில் பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி வருகையின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத கோயில் பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொரோனா ஊரட ங்கு தளர்வை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 குறிப்பாக சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. கடந்த 23ம் தேதி சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். பிற்பகலில் வந்த நீதிபதி சுப்பிரமணியம் தரிசனத்திற்கு வந்த போது, மகா மண்டபத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியின்றியும், முககவசம் அணியாமலும் இருந்தனர்.

இதைக்கண்ட நீதிபதி சுப்பிரமணியம், உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்பும்படி கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இந்நிலையில் பக்தர்கள் சமூக இடைவெளியின்றி, முககவசம் அணியாமல் தரிசனம் செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்ததாக அன்றைய தினம் கோயிலின் உள்ளே பணியில் இருந்த மணியம் சங்கரன், அலுவலக உதவியாளர்கள்  ஆறுமுகம், சுரேஷ், மணிகண்டன், வெண்ணிமுத்து, தூய்மை பணியாளர் மாடசாமி உள்ளிட்ட 6 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்து கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: