திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு தகுந்தபடி 133 யோகாசனம் செய்து 7 வயது சிறுமி அசத்தல்

*திருவண்ணாமலையில் சாதனை முயற்சி

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு ஏற்றபடி, 133 யோகாசனங்களை செய்து ஏழு வயது சிறுமி சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராமன். தனியார் நிறுவன ஊழியர். அவரது மகள் சமந்தா(7). தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். மேலும், தனியார் பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சியும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று நேரு யுவகேந்திரா மற்றும் தனியார் அமைப்பு  சார்பில் ஏற்பாடு செய்திருந்த யோகாசன நிகழ்ச்சியில், சிறுமி சமந்தா கலந்துகொண்டார். அப்போது, பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கு ஏற்றபடி, 133 விதமான யோகாசனங்களை செய்து அசத்தினார். இந்த முயற்சியின் மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், தொடர் யோகா பயிற்சியின் மூலம் விரைவில் மற்றுமொரு சாதனை முயற்சியில் ஈடுபட மாணவி திட்டமிட்டிருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், நேரு யுவகேந்திரா ஊழியர்கள் மற்றும் தனியார் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>