அசாம் - மிசோரம் எல்லையில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவம்

திஸ்பூர்: அசாம் - மிசோரம் மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு துணை ராணுவ படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையே எல்லைப்பிரச்சனை நிலவும் நிலையில் அதுதொடர்பாக இரு மாநில காவல் துறையினருக்கு இடையே மோதல் மூண்டது. இதில் அசாம் மாநில காவல்துறையினர் 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் இருமாநில காவல்த்துறையினர் வாபஸ் பெறப்பட்டு துணை ராணுவப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இருமாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கிடையில் எல்லை பிரச்சனை குறித்து சமரசம் செய்து வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அசாம், மிசோரம் மாநில தலைமை செயலாளர்களும், டிஜிபிக்களும் பங்கேற்றனர்.

வடகிழக்கு மாநிலங்களுக்குள் நிலவும் எல்லை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய 2 நாட்களிலேயே இரு மாநில எல்லையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>