பாதிப்பை குறைக்காத கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.66 கோடியை தாண்டியது: 42.02 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,202,562 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 196,624,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 178,071,886 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,845 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.66 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,66,43,249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 80 லட்சத்து 77 ஆயிரத்து 770 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 லட்சத்து 02 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,43,62,720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 86,544 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories:

>