9 பேருக்கு ஆர்டிஓ பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் கிரிராஜன், பேத்திக்குப்பம் சோதனை சாவடி ஆர்டிஓவாகவும்; விழுப்புரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சிவக்குமார் திண்டிவனம் ஆர்டிஓவாகவும்; பாலக்கோடு ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் முனுசாமி, கோபிச்செட்டிப்பாளையம் ஆர்டிஓவாகவும்; தர்மபுரி ஆர்டிஓ அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றி வரும் சாமி, கிருஷ்ணகிரி ஆர்டிஓவாகவும், வேலூரில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாலமுருகன், கோவை தெற்கு ஆர்டிஓவாகவும்; கோவை மத்திய ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சித்ரா, மதுரை மத்திய ஆர்டிஓவாகவும்; நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பூங்குழலி, சென்னை தெற்கு மண்டலத்திற்கு ஆர்டிஓவாகவும்; திருநெல்வேலி ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சத்யகுமார், கோவை மத்திய ஆர்டிஓவாகவும்; நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் ேநர்முக உதவியாளராக பணியாற்றி வரும் மோகன், சென்னை தென்கிழக்கு ஆர்டிஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>