அண்ணா பல்கலைக்கழகத்தை ேபால அனைத்து பல்கலையிலும் ஒரே தேர்வு முறை: அமைச்சர் தகவல்

சென்னை: உயர்கல்வித்துறையின் சார்பில் நேற்று நடந்த  ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:  அண்ணா பல்கலைக் கழகத்தைப் போலவே மற்ற கல்லூரிகளிலும் மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அதனால், ஒரே தேர்வு முறை, ஒரே மதிப்பீட்டு முறை குறித்து  பரிசீலிக்கப்படும். மேலும், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்காக நேற்றுவரை 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும் நாட்களில் மேலும் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 748 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் மற்றும்  கலைக் கல்லூரிகளில்  முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர  மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன்  வகுப்புகள் தொடங்க உள்ளது என்றார்.

அரியர்ஸ் இருந்தாலும்2ம் ஆண்டு படிக்கலாம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேலும் கூறியதாவது,‘அண்ணா பல்கலைக் கழகத்தில் அனைத்து பாடத்திலும் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>