கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைப்பு தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் சடலம் ஒரு மாதத்துக்கு பிறகு தோண்டியெடுப்பு: மனைவி உட்பட 3 பேர் கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன்(53). அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியர். இவரது மனைவி ஷோபனா(30). இவர்களுக்கு அன்புக்கரசி(10), கோவேஷ்(2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி முதல் அன்பழகனை காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஷோபனா சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில், 10 நாள்களுக்கு பிறகு குழந்தைகளுடன் ஷோபனாவும் மாயமானார். சுங்குவார்சத்திரம் போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். அதில், அரக்கோணத்தில் உள்ள லாட்ஜில் ஷோபனா தங்கியிருப்பது தெரியவந்தது. லாட்ஜிக்கு போலீசார் சென்றபோது ஷோபனா தர்மராஜ் என்பவருடன் தங்கியிருந்தார்.

இரண்டு பேரிடம் விசாரித்தபோது அன்பழகனை, ஷோபனா, தர்மராஜ், தர்மராஜின் நண்பன் விக்னேஷ்(23) ஆகியோர் சேர்ந்து கடந்த 22ம் தேதி கொலை செய்து வீட்டுக்கு பின்புறம் உள்ள கூவம் ஆற்றுப்படுகையில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து செய்தனர். விசாரணையில், தர்மராஜூவுக்கும், ஷோபனாவுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலால் அன்பழகனை, தர்மராஜ் கத்தியால் குத்தி கொலை ெசய்தது தெரியவந்தது. போலீசார், டாக்டரை வரவழைத்து நேற்று அன்பழகனில் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதற்கிடையில் கொலை செய்த 2 பேரையும் போலீசார் அழைத்து சென்று வேனில் ஏற்றும்போது அப்பகுதி மக்கள் அவர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். போலீசார் அதை தடுத்தனர்.

Related Stories:

>