கோயில்களில் இன்று அமைச்சர் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இன்று ஆய்வு செய்ய உள்ளார். சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றில் இன்று காலை 7.30 மணி முதல் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு நடத்த உள்ளனர். கோயிலுக்கு சொந்தமான இடங்கள், ஆக்கிரமிப்புகள், கோயில் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், திருமண மண்டபம், தங்கும் விடுதி போன்ற பணிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

Related Stories:

>