ஜெய்சங்கர், அஜித் தோவலுடன் அமெரிக்க அமைச்சர் தனித் தனியாக பேச்சு

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். நேற்று காலை அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தனித்தனியாக சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்திய-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இவர்கள் ஆலோசித்தனர். பிளிங்கன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மக்கள் சமுதாயத்துக்குரிய தலைவர்களை சந்தித்தில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவும், இந்தியாவும் ஜனநாயகத்துக்கான கோட்பாடுகளை பகிர்ந்து கொள்வதில் உறுதி பூண்டுள்ளன. இதுதான் இருநாட்டு உறவின் ஆழமாகும். இது, இந்தியாவின் பன்முக சமுதாய தன்மை மற்றும் நல்லிணக்க வரலாற்றை பிரதிபலிக்கிறது. இவற்றை மேம்படுத்த மக்கள் உதவுகின்றனர்,’ என கூறியுள்ளார்.

Related Stories: