படகு போட்டியில் போராடி தோல்வி

ஒலிம்பிக்  துடுப்புப் படகு போட்டி ஆண்கள் இரட்டையர்-ஏ பிரிவில் இந்திய வீரர்கள் அரவிந்த் சிங், அர்ஜூன் லால் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் 6:51.13 நிமிடங்களில் தங்கள் சுற்றை நிறைவு செய்து  முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினர். கடலில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய இணை 6 நிமிடம் 24.41 விநாடிளில் இலக்கை அடைந்து 6வது இடத்தை பிடித்தது. முதல் 3 இடங்களை பிடித்த அயர்லாந்து (6:05.33), இத்தாலி (6:07.70), பெல்ஜியம் (6:13.07) பைனலுக்கு முன்னேறின.

இது குறித்து இந்திய துடுப்புப் படகு விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வி.ஸ்ரீராம் கூறுகையில், ‘இந்திய வீரர்கள் இலகு ரக ஆடவர் துடுப்பு படகுப் போட்டி ஏ பிரிவில் குறைந்த வித்தியாசத்தில் தான் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். அனுபவம் வாய்ந்த இத்தாலி, அயர்லாந்து, பெல்ஜியம், உக்ரைன், ஸ்பெயின் அணிகளுடன் மோதினர். 6வது வரிசையில் இருந்ததால் கடல் காற்றை சமாளிக்க வேண்டிய சிரமமும் இருந்தது. அதையெல்லாம் மீறி அரையிறுதியில் 100 சதவீதம் தங்கள் உழைப்பை அளித்துள்ளனர். இதற்கு முன் இல்லாத அளவுக்கு முதல் முறையாக 6:24.21 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற உள்ள பி பிரிவு ஆட்டத்தில் சாதிக்க நமது வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறாம்’ என்றார்.

Related Stories:

>