வைப்பு நிதி காப்பீடு ரூ.5 லட்சமாக உயருகிறது: டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: முடங்கும் நிலைக்குச் செல்லும் வங்கிகளின் டெபாசிட் தாரர்களின் வைப்புத் தொகை காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பணம் பெறுவது, அனுப்புவது, பரிமாற்றம் உள்ளிட்ட பல வகையான சேவைகள் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; முடங்கும் நிலைக்குச் செல்லும் வங்கிகளின் டெபாசிட் தாரர்களின் வைப்புத் தொகை காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளது. வங்கிகள் திவாலானால் டெபாசிட் தாரர்களின் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகைக்கு காப்பீடு கிடைக்கும். வங்கியின் செயல்பாடு முடங்கினால் 90 நாட்களில் டெபாசிட் தாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வைப்பு தொகை கிடைக்கும்.

இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கி கிளைகளுக்கும் இது பொருந்தும். வங்கிகளில் தனி நபர் டெபாசிட் பணத்திற்கான காப்பீடு, கடந்த ஆண்டு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது எனவும் கூறினார்.

Related Stories:

>