கோயில் கொடை விழாவையொட்டி வல்லநாட்டில் மாட்டுவண்டி போட்டி: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

செய்துங்கநல்லூர்:  வல்லநாட்டில்  கோவில் கொடை விழாவையொட்டி  மாட்டு வண்டி  போட்டி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை மாட்டு வண்டி போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பிரதிநிதி  முத்து தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய முன்னாள் தலைவர் முருகன், பெரிய மாட்டு வண்டி போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி,  சின்ன மாட்டு வண்டி போட்டிகளை துவக்கி வைத்தார்.

மாட்டு வண்டி போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில்  பெரியமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று வகையான மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

பெரிய மாட்டு வண்டி போட்டியில்  முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே  ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் சின்ன மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளை கிராம மக்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா உதவியாளர்கள் பாலகிருஷ்ணன், பேச்சிமுத்து, கள்ளத்தியான்,  ராஜ், தம்பான், விஎஸ் தம்பான், முத்து, சங்கர்,  ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், பேச்சி, ராசு  ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: