திருவனந்தபுரத்தில் ஆன்லைன் கேம் விளையாடிய மாணவர் தற்கொலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆன்லைன் கேம் விளையாடிய கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கார்யம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். ெகால்லம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி சினி. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் இம்ரான் அப்துல்லா (21). திருவனந்தபுத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். இம்ரான் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்தார்.

இதனால் யாரிடமும் பேசாமல் பெரும்பாலும் தனி அறையிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு நீண்டநேரமாக அவரது அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது இம்ரான் அப்துல்லா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த கிடந்தார். இது குறித்து கார்யம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து இம்ரானின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories:

>