ஓய்வுபெற 3 நாட்கள் உள்ள நிலையில் சிபிஐ முன்னாள் அதிகாரி டெல்லி கமிஷனராக நியமனம்

புதுடெல்லி: இன்னும் ஓய்வுபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் முன்னாள் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா, டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) இயக்குநர் ஜெனரலான குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜூன் 30ம் தேதி எஸ்.என்.வாஸ்தவா ஓய்வு பெற்ற பின்னர் டெல்லி காவல்துறையின் கூடுதல் பொறுப்பை பாலாஜி வாஸ்தவா கவனித்து வந்தார். இந்த நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா  நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) முன்னாள் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, வரும் 31ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், அவர் டெல்லி காவல்துறையின் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்த நீடிக்கப்பட்ட பதவியில் ஒரு வருடம் பணியாற்றுவார். முன்னதாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடங்கிய அமைச்சரவையின் நியமனக் குழுவின் பரிந்துரையின்படி, டெல்லி காவல்துறைத் தலைவராக அஸ்தானாவுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>