வாலிபரை வெட்டிய 4 பேர் கைது

தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 6-வது தெருவைச் சேர்ந்தவர் பரத் (23). இவர், நேற்று தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 4 பேர், பரத்திடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமான அக்கும்பல், பரத்தை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் பரத்தின் இடதுகையில் பலத்த வெட்டு விழுந்தது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார், பரத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இப்புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், வாய்த்தகராறில் சரத்தை கத்தியால் வெட்டிய அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22), சூர்யா (25), குப்பா சரவணன் (25), பிரவீன் (21) ஆகிய 4 பேரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>