ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை வெள்ளப் பெருக்கால் 5 பேர் பலி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 5 பேர் பலியான நிலையில், 30க்கும் மேற்பட்டோர்  மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை கிஷ்த்வார் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மேலும், 9க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஸ்.டி.ஆர்.எப் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பலத்த மழை காரணமாக இன்டர்நெட் சேவை முடங்கியுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இம்மாதம் முழுவதும் ஜம்முவில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்தல் அவசியம்’ என்று தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘டெல்லி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிக மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: