அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை - ஐகோர்ட்டில் விஜய் தரப்பு

சென்னை: அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துவிட்டதாக நடிகர் விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது. சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணை நடைபெற்றது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். முந்தைய அமர்வில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கு நேற்று ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

Related Stories:

>